தலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி

தலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி

by Bella Dalima 17-01-2020 | 6:10 PM
ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர்- ஆக நடித்து வரும் அரவிந்த் சாமியின் தோற்றத்தை படக்குழுவினர் வௌியிட்டுள்ளனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்திற்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கும் எழுதி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.