by Bella Dalima 17-01-2020 | 7:10 PM
Colombo (News 1st) உக்ரைன் பிரதமர் ஒலெக்சி ஹொன்சருக் (Oleksiy Honcharuk) தமது இராஜினாமா கடிதத்தை அந்நாட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை (Volodymyr Zelensky) விமர்சிக்கும் தொலைபேசி உரையாடலின் குரல்பதிவு வௌியாகியதையடுத்து, இராஜினாமா கடிதத்தினை அவர் கையளித்துள்ளார்.
குறித்த தொலைபேசி உரையாடலிலுள்ள குரல் பிரதமருடையது போல இருக்கின்ற போதிலும் அது உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky பொருளாதார விடயத்தில் பழைமையான சித்தாந்தத்தை பின்பற்றி வருவதாக அந்த ஒலிப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவானது கடந்த புதன்கிழமை (15) மாலையில், இனந்தெரியாத ஒருவரால் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் பிரதமர் Oleksiy Honcharuk தாமாகவே முன்வந்து இராஜினாமா கடிதத்தைக் கையளித்தாரா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், பிரதமரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இறுதி முடிவினை எடுக்கவுள்ளார்.
தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும், வர்த்தகருமான Volodymyr Zelensky கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் உக்ரைனின் ஜனாதிபதியாக தெரிவானார்.