by Staff Writer 17-01-2020 | 8:34 PM
Colombo (News 1st) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி இன்று தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.