ரயில்வே திணைக்கள நீர் வழங்கல் திட்டத்தில் மோசடி

ரயில்வே திணைக்களத்தின் நீர் வழங்கல் திட்டத்தில் மோசடி: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 17-01-2020 | 4:02 PM
Colombo (News 1st) ரயில்வே திணைக்களத்தின் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்கமுவயில் இருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கும் செயற்றிட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே இராஜாங்க அமைச்சர் C.B.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டமைக்கு இணங்க எந்த இடத்திலும் நீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கடந்த காலங்களில் ரயில்வே திணைக்களத்திற்கு மின்விசிறிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்ற ஊழல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே இராஜாங்க அமைச்சர் C.B.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.