by Bella Dalima 17-01-2020 | 5:25 PM
பங்களாதேஷூடனான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பாபர் அசாமின் தலைமைத்துவத்தின் கீழ் 15 பேரடங்கிய பாகிஸ்தான் அணி பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் அணி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பின்னடைவை சந்தித்ததையடுத்து , இம்முறை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதனடிப்படையில், கடந்த இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக விளையாடிய 7 வீரர்கள் இம்முறை போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் , கடந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படாத மொஹமட் ஹபீஸ் மற்றும் சொயிப் மலிக் ஆகியோருக்கு பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.