சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்

சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jan, 2020 | 3:24 pm

Colombo (News 1st)  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல தொகுதியின் புதிய அமைப்பாளராக லசந்த அழகியவண்ண நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒழுக்கக் கோவையை மீறி, கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்த டிலான் பெரேரா, எஸ்.பி. திசாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகள் நாளையுடன் நிறைவடைகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்ட விஜித் விஜயமுனி சொய்சா தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணையை நாளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்