சீனாவில் 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி

சீனாவில் 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி

சீனாவில் 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2020 | 4:54 pm

Colombo (News 1st) சீனாவில் 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகின் இரண்டாவது வல்லரசான சீனாவில் கடந்த ஆண்டு 6.1 வீத பொருளாதார வளர்ச்சி மாத்திரமே பதிவாகியுள்ளது.

இதனூடாக சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

உள்நாட்டுத் தேவையில் மந்தநிலை, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள் என்பன பொருளாதார சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தேசிய புள்ளிவிபர அமைப்பு தெரிவித்துள்ளது.

1990 ஆம் ஆண்டிற்கு பின்னர், இத்தகைய பொருளாதார வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்