உள்நாட்டு விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 வருட தடை தளர்த்தப்பட்டது

உள்நாட்டு விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 வருட தடை தளர்த்தப்பட்டது

உள்நாட்டு விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 வருட தடை தளர்த்தப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2020 | 4:18 pm

Colombo (News 1st) கொழும்பு நகரில் இருந்து இயங்கும் உள்நாட்டு விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 25 வருடங்களின் பின்னர் தளர்த்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, காலி முகத்திடலில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் ஹெலிகொப்டர்களை தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தடை தளர்த்தப்பட்ட நிலையில், 4 தேசிய விமான சேவை நிறுவனங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 25 வருடகாலங்களில் இரத்மலானை மற்றும் பத்தரமுல்லையில் இருந்து உள்நாட்டு பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தீர்மானத்துடன் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்