அம்பேபுஸ்ஸ பகுதியில் புதிய நுளம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அம்பேபுஸ்ஸ பகுதியில் புதிய நுளம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அம்பேபுஸ்ஸ பகுதியில் புதிய நுளம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2020 | 5:58 pm

Colombo (News 1st) நோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புல் (Near inful) என அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு, அம்பேபுஸ்ஸ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 154 என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அம்பேபுஸ்ஸ பகுதியில் இந்த நுளம்பை கண்டறிவதற்காக விசேட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்