by Staff Writer 17-01-2020 | 4:09 PM
Colombo (News 1st) அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் 15 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகேவினால் சந்தேகநபருக்கு எதிராக கடூழிய சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமக்கு கீழ் பணியாற்றிய தம்பதியரின் மகளான 14 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக தமக்கு சொந்தமான ஹோட்டலொன்றுக்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 250,000 ரூபா நட்டஈட்டை வழங்குமாறும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டிய நீதவான் , இத்தகைய சிலரின் செயற்பாடுகளினூடாக மக்கள் பிரதிநிதிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.