MIM-இல் பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

by Staff Writer 16-01-2020 | 8:51 PM
Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் MIM எனப்படும் Maharaja Institute of Management இல் பாடநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இலத்திரனியல் ஊடங்கள் தொடர்பிலான டிப்ளோமா பாடநெறி, தொலைக்காட்சி மற்றும் வானொலி தொகுப்பு தொடர்பிலான சான்றிதழ் பாடநெறி, விற்பனை மற்றும் விநியோக பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் இன்று டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 75 இளைஞர், யுவதிகள் இந்த பாடநெறியை நிறைவு செய்துள்ளனர். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, MIM-இன் 2019 ஆண்டிற்கான சிறந்த மாணவருக்கான தங்க விருதை ருஹாஸா இர்ஃபான் பெற்றுக்கொண்டார். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் இலத்திரனியல் ஊடகக் குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசிங்க, சட்டம் மற்றும் மனித வள குழுமப் பணிப்பாளர் சுரங்க ஜயலத், குழுமம் பணிப்பாளர் ஷெவான் டேனியல், MIM நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சேத்தனா லியனகே உள்ளிட்ட பலர் இந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றினர்.