2020 ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வௌியீடு

2020 ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வௌியீடு

2020 ஆம் ஆண்டின் தலைசிறந்த நாடுகளின் பட்டியல் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2020 | 5:16 pm

Colombo (News 1st) கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து தலைசிறந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டில் வாழக்கூடிய சூழ்நிலை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை விட முன்னிலையில் இருப்பது சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களான சுத்தமான நீர், நிலம், காற்று ஆகியவையுமே.

இந்நிலையில், கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து 2020 ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின் பட்டியலை, அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கையும் பென்சில்வேனியா பல்கலைக்கழகமும் பாவ் என்ற உலகளாவிய ஆலோசனை மையமும் சேர்ந்து வெளியிட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் வருமாறு:-

இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள்: 1) சுவீடன் 2) சுவிட்சர்லாந்து 3) பின்லாந்து

மிகவும் பலம் வாய்ந்த நாடுகள்: 1) அமெரிக்கா 2) ரஷ்யா 3) சீனா

கல்வியில் சிறந்த நாடுகள்: 1) அமெரிக்கா 2) பிரிட்டன் 3) கனடா

தொழில் தொடங்க ஏற்ற நாடுகள்: 1) தாய்லாந்து 2) மலேசியா 3) சீனா

பெண்களுக்கான நாடுகள்: 1) டென்மார்க் 2) ஸ்வீடன் 3) நெதர்லாந்து

சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகள்: 1) கனடா 2) டென்மார்க் 3) ஸ்வீடன்

அனைத்து விதத்திலும் சிறந்த நாடுகள்: 1) சுவிட்சர்லாந்து 2) கனடா 3) ஜப்பான் 4) ஜெர்மனி 5) அவுஸ்திரேலியா 6) பிரிட்டன் 7) அமெரிக்கா 8) ஸ்வீடன் 9) நெதர்லாந்து 10) ​நோர்வே.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்