ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய நீதவான் பணி இடைநிறுத்தம்

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய நீதவான் பணி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2020 | 8:08 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்த காணொளி உரையாடலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபாலவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்தது.

அதற்கமைய, பத்தேகம நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதியாக சிலாபம் மேலதிக நீதவான் ரக்கித அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பில் ஜனாதிபதியிடம் சிபாரிசுகளை முன்வைத்துள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்