குரல் பதிவு தொடர்பில் விசாரிக்க பொலிஸ் குழுக்கள்

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணை செய்ய 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்

by Staff Writer 16-01-2020 | 3:58 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் விசாரணை செய்வதற்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். விசாரணைகளின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஒவ்வொரு பிரிவின் அடிப்ப​டையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் தொலைபேசி குரல் பதிவுகளின் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவற்றை எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்குமாறு நுகேகொடை நீதவான் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.