by Bella Dalima 16-01-2020 | 3:39 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் பகுதியில் மதுபோதையுடன் இருந்த நான்கு இளைஞர்களும் நேற்றிரவு இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நால்வரையும் கைது செய்த இராணுவத்தினர் அவர்களை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நாகர்கோவில் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு
பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.