தோனியின் பெயர் இல்லாத BCCI கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்

தோனியின் பெயர் இல்லாத BCCI கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்

தோனியின் பெயர் இல்லாத BCCI கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2020 | 5:42 pm

Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு கிரேட் A+, A, B, C முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ஒக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான நடப்பு ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேபோன்று, BCCI தற்போது வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலின் எந்த பிரிவிலும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை.

BCCI வெளியிட்டுள்ள வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவர் இனி எப்போதுமே இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்று பொருளில்லை என்றும், ஆனால் BCCI-இன் நீண்டகால திட்டத்தில் தோனி இல்லை என்றும் தெரிவதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் சபையால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் மொத்தம் 27 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு வீரர்கள் முறையே A மற்றும் C பிரிவுகளில் இடம்பெற்றுள்ளனர்.

 

 

 

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்