தமிழகத்தில் களை கட்டிய ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் களை கட்டிய ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் களை கட்டிய ஜல்லிக்கட்டு

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2020 | 6:51 pm

Colombo (News 1st) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று ஜல்லிக்கட்டு களை கட்டியது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது.

காளைகளை ஓடவிட்டு அதனை விரட்டிச் சென்று திமிலை பிடித்து வீரர்கள் அடக்குவர். பழங்காலம் முதலே ஜல்லிக்கட்டு நடத்தி வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

இந்தியாவில் முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ப்பட்டிருந்தது.

அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாவட்ட நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று மட்டும் உத்தரவிட்டது.

நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று பாலமேட்டிலும் நாளை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கவுள்ளது.

ஜனவரி 31 ஆம் திகதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்