கரைத்துறைப்பற்று பிரதேச சபை அமர்வில் மண் அகழ்வு தொடர்பில் வாய்த்தர்க்கம்

கரைத்துறைப்பற்று பிரதேச சபை அமர்வில் மண் அகழ்வு தொடர்பில் வாய்த்தர்க்கம்

கரைத்துறைப்பற்று பிரதேச சபை அமர்வில் மண் அகழ்வு தொடர்பில் வாய்த்தர்க்கம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2020 | 7:37 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் முறையற்ற மண் அகழ்வு தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

கரைத்துறைப்பற்று பிரதேச சபையால் கடந்த 6 வருடங்களாக கயற்றை காட்டுப்பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது.

இந்தக் குப்பைகளைக் கொட்டுவதற்காக தனியார் நிறுவனத்தினால் குழி அகழப்பட்டதுடன், அந்நிறுவனம் அகழப்பட்ட மணலை எடுத்துச்சென்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் வனவள திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை குறித்து கடந்த வௌ்ளிக்கிழமை நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பிரதேச சபையின் அமர்வின் போது சபை உறுப்பினரான சின்னராசா லோகேஷ்வரன் இது குறித்து கேள்வி எழுப்பியபோது அமைதியின்மை ஏற்பட்டதுடன், அவர் சபையிலிருந்து வௌியேறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்