ஐ.தே.க பாராளுமன்ற குழுக்கூட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுடன் நிறைவு

ஐ.தே.க பாராளுமன்ற குழுக்கூட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுடன் நிறைவு

ஐ.தே.க பாராளுமன்ற குழுக்கூட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2020 | 9:40 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் கடும் வாதப்பிரதிவாதங்களுடன் நிறைவு பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், கட்சி பிளவுபடாமல் முன்நோக்கி செல்ல வேண்டும் என்ற விடயத்தை ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நீடித்த இந்த கூட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்