இரத்மலானை நகைக்கடையில் கொள்ளை: 8 பேர் கைது

இரத்மலானை நகைக்கடையில் கொள்ளை: 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது

by Bella Dalima 16-01-2020 | 3:31 PM
Colombo (News 1st) இரத்மலானையிலுள்ள நகைக்கடையொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் திகதி குறித்த கடைக்குள் பிரவேசித்த சந்தேகநபர்கள், ஊழியர்களை ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி 21,71,225 ரூபா பெறுமதியான தங்காபரணங்களைக் கொள்ளையடித்துள்ளனர். படோவிட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை, அம்பலாங்கொடை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.