வொஷிங்டன் DC-யின் இந்திய தூதுவராக தரன்ஜித் சிங் பெயரிடப்படவுள்ளார்

வொஷிங்டன் DC-யின் இந்திய தூதுவராக தரன்ஜித் சிங் பெயரிடப்படவுள்ளார்

வொஷிங்டன் DC-யின் இந்திய தூதுவராக தரன்ஜித் சிங் பெயரிடப்படவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2020 | 8:10 pm

Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, வொஷிங்டன் DC-யின் இந்திய தூதுவராக பெயரிடப்படவுள்ளார்.

இராஜதந்திர அதிகாரிகளின் நியமன செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டவுடன், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் மூன்று வருட பதவிக்காலம், எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வொஷிங்டன் DC-யின் இந்திய தூதரகத்தின் பிரதி தூதுக்குழுவின் தலைமை அதிகாரியாகவும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2013 ஆம் ஆண்டு ஜூலை வரை Frankfurt-இல் இந்திய கன்சியூலர் நாயகமாகவும் அவர் சேவையாற்றியிருந்தார்.

உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வௌியிடப்படாமையினால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்