English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Jan, 2020 | 6:25 pm
Colombo (News 1st) தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது.
‘நானும் சிங்கிள் தான்’ என்ற இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார்.
மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி.
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சரியமாக பார்க்கப்படும் ஜோடியும் கூட.
இந்த படத்தின் ஹீரோவின் இலட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும்
என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இப்படம் பெப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
09 Jun, 2022 | 04:15 PM
30 Dec, 2019 | 03:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS