தேசிய இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

தேசிய இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2020 | 8:21 pm

Colombo (News 1st) தேசிய இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கை எட்டுவதற்கு இலங்கையை தமது தாய்நாடாகக் கருதி செயற்படுமாறு, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

உன்னத மானிடப் பண்புகளினால் வாழ்வு வளம்பெற வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தைப்பொங்கலை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமிழில் தனது வாழ்த்துச் செய்தியை வௌியிட்டுள்ளார்.

இன மற்றும் கலாசார பேதங்களுக்கு அப்பால் அமைதியான, சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புச் செய்வது அனைவரதும் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய சிறந்த எதிர்காலமொன்று உருவாவதற்காக பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்