ஆலிஸ் வெல்ஸ் – சம்பந்தன் சந்திப்பு

ஆலிஸ் வெல்ஸ் – சம்பந்தன் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2020 | 9:58 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் பிரதி உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் நேற்று (14) பிற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் ஐ.நா சபையினால் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் தீர்மானம் தொடர்பிலும் அரசியல் கைதிகள் குறித்தும் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் பிரதி உதவி செயலாளரிம் வலியுறுத்தியதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்