அரச கூட்டுத்தாபன தலைவர்களின் சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அரச கூட்டுத்தாபன தலைவர்களின் சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அரச கூட்டுத்தாபன தலைவர்களின் சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2020 | 4:02 pm

Colombo (News 1st) அரச கூட்டுத்தாபனம் மற்றும் சபைத்தலைவர்களின் மாதாந்த கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபா வரை மட்டுப்படுத்தப்பட்டு, ஜனாதிபதி செயலாளரினால் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிரூபத்தின் பிரகாரம், குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக ஒரு வாகனம் மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

இதனை தவிர, பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 25,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ வாகனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதி செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க செலவுகளை மட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்