சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி

சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி

by Staff Writer 14-01-2020 | 1:05 PM
Colombo (News 1st) சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தவதற்கு சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி வழங்கவுள்ளது. சுகாதார சுட்டெண்ணின் அதிகரிப்பிற்காகவும் 2020-2022 ஆண்டு திட்டத்துக்காக 20 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு சர்வதேச நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நிதியத்தின் திட்டப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நாட்டில் காசநோய், மலேரியா மற்றும் பாலியல் நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 18 வருடங்களாக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு 18.3 மில்லியன் ரூபாவை நிதி உதவியாக வழங்கியுள்ளது.