இலங்கையுடனான உறவை மேம்படுத்த நடவடிக்கை - ஜப்பான்

இலங்கையுடனான இராஜதந்திர உறவை மேம்படுத்த நடவடிக்கை - ஜப்பான்

by Staff Writer 14-01-2020 | 7:08 AM
Colombo (News 1st) இலங்கையுடனான நீண்டகால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, வலய மறுசீரமைப்பு தொடர்பிலான ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமொதோ குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை , ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், கைத்தொழில் மற்றும் வேறு துறைகளில் ஜப்பான் பெற்றுள்ள அனுபவங்கள் மூலம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என வலய மறுசீரமைப்பு தொடர்பிலான ஜப்பானின் இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய 7 வீத பொருளாதார வளர்ச்சி வேகம், வீழ்ச்சியடைந்துள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது ஜப்பானின் இராஜாங்க அமைச்சருக்கு தௌிவுபடுத்தியுள்ளதுடன், அதனை கட்டியெழுப்புவதே பிரதான சவால் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் தொழில்நுட்பம் கொண்ட கைத்தொழில்களில் முதலீட்டு சந்தர்ப்பங்களை இலங்கைக்கு பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.