ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்

ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்

by Staff Writer 14-01-2020 | 8:53 AM
Colombo (News 1st) மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். இருதய நோய் காரணமாக கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பணிப்புரைக்கு அமைய, சிகிச்சைகளின் பின்னர் இன்று (14) அதிகாலை ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலையின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.