ராஜித சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

ராஜித சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

ராஜித சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2020 | 4:29 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இன்று முற்பகல் முதல் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்