ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2020 | 9:23 am

Colombo (News 1st) ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வலய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ரஷ்யா மற்றும் இலங்கை கவனம் செலுத்தவுள்ளது.

கலந்துரையாடல்கள் நிறைவுபெற்ற பின்னர் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்