தோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா?

தோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா?

தோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா?

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2020 | 9:20 pm

Colombo (News 1st) இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இலங்கை 2-0 என தொடரை இழந்தது.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மாலிங்கவின் தலைமையில் நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் இலங்கை 3-0 என தோல்வியடைந்தது.

அந்தத் தருணத்தில் இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைமைப் பொறுப்பு இளம் வீரர் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்று நியூஸ்ஃபெஸ்ட் வலியுறுத்தியது.

அணித்தலைமையில் எதற்காக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை கடந்த வருடம் நவம்பர் முதலாம் திகதி நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

தசுன் ஷானக்க தலைமையில் இலங்கை இருபதுக்கு 20 அணி புதுமுக வீரர்கள் பலருடன் உலகின் முதல் நிலை இருபதுக்கு 20 அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3 -0 என வீழ்த்தியது.

பானுக்க ராஜபக்ச, மினோத் பானுக்க, அவிஷ்க பெர்னாண்டோ போன்ற வீரர்களின் ஆற்றல்களின் மூலம் மீண்டும் இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உருவாக்கி இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்தியாவில் அடைந்த தோல்வியை அடுத்து மீண்டும் அணித்தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இவ்விடயத்தில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு வலுவான அணியை உருவாக்க இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் தெரிவுக்குழுவும் அதிகாரிகளும் வாய்ப்பளிக்க வேண்டும்.

வெற்றிகரமான அணித்தலைவராக ஆற்றலை வெளிப்படுத்திய போதிலும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தோல்வியடைந்த அணித்தலைவர் மீதே இதன் பின்னரும் நம்பிக்கை வைக்கலாமா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்