குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு வழக்கு

by Staff Writer 14-01-2020 | 2:08 PM
Colombo (News 1st) இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. குடியுரிமைத் திருத்தச்சட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி கேரள அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. CAA எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள முதலாவது மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய குடியுரிமைத் திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திருத்தச்சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி, டில்லி பல்கலைக்கழக மாணவர்களும் சில நாட்களுக்கு முன்னர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன​ர். இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டில்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தின் போது, தேசிய குடியுரிமை சட்டத்தையும் மீளப்பெற வேண்டும் எனவும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.