by Staff Writer 14-01-2020 | 3:38 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்களை தடையின்றி வழங்க தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.
அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போது, ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரவ் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு தகைமையை மேலும் விருத்தி செய்துகொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்கவும் தயார் என ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.