இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 20 பேர் காயம்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 20 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2020 | 10:59 am

Colombo (News 1st) ஹட்டன் – கினிகத்ஹேன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 20 பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்