முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து

by Chandrasekaram Chandravadani 13-01-2020 | 7:05 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு (Pervez Musharraf) சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை அரசியல் சட்டத்துக்கு முரணானது எனவும் லாகூர் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மீது தேசத்துரோகம் புரிந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்து சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இந்தத் தீர்ப்பானது அரசியல் பழிவாங்கல் என துபாயில் தலைமறைவாகவுள்ள பர்வேஸ் முஷாரப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே, அவரது மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.