by Staff Writer 13-01-2020 | 5:33 PM
Colombo (News 1st) நாட்டிலிருந்து 200 தேள்களைக் கடத்திச்செல்வதற்கு முயற்சித்த சீனப்பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் குவென்சூ நகர் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தமது பயணப் பொதியில் வைத்து தேள்களை உயிருடன் கொண்டுசெல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து தேள்களை வௌிநாடுகளுக்குக் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.