MCC உடன்படிக்கையை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை

MCC உடன்படிக்கையை அமுல்படுத்த இடமளிக்கப் போவதில்லை - எதிர்க்கட்சித் தலைவர்

by Staff Writer 12-01-2020 | 1:34 PM
Colombo (News 1st) MCC உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார். MCC உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை தான் இந்தத் தருணத்தில் கூற விரும்புவதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து, MCC உடன்படிக்கையை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தலில் தங்களின் சார்பாக பிரதமரை நியமித்தால் என்ன? தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இணைந்து பணியாற்ற தான் தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.