முல்லைத்தீவில் விபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது

முல்லைத்தீவில் விபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது

முல்லைத்தீவில் விபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2020 | 5:29 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கடற்படையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படைக்கு சொந்தமான ட்ரக் வண்டியை செலுத்தியவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் ட்ரக் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி இன்று முற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது துணுக்காய் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்