இந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் நாடு திரும்ப இணங்கியுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

இந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் நாடு திரும்ப இணங்கியுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

இந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் நாடு திரும்ப இணங்கியுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Jan, 2020 | 7:19 pm

Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது CNN – News18-க்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.

இதன்போது, இந்தியாவில் உள்ள 3000 தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்ப இணங்கியுள்ளதாகவும் அடுத்த சில மாதங்களுக்குள் அவர்கள் நாடு திரும்புவார்கள் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னதாக, நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சந்திரஹாசன் தலைமையிலான அமைப்பினர் மேற்கொள்வதாகவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

வௌிவிவகார அமைச்சில் சில வாரங்களுக்கு முன்னர் சந்திரஹாசனை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்