அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி: விசாரணைகள் ஆரம்பம்

அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி: விசாரணைகள் ஆரம்பம்

அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி: விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2020 | 3:53 pm

Colombo (News 1st) அஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அஸர்பைஜானின் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற மாணவிகளே உயிரிழந்துள்ளனர்.

21, 23 மற்றும் 25 வயதான மூன்று மாணவிகளே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மின் ஒழுக்கு காரணமாக குறித்த மாடி வீட்டில் தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த தீ விபத்து தொடர்பில் அந்நாட்டு தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்