வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

by Staff Writer 10-01-2020 | 3:31 PM
 Colombo (News 1st)  வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது. இன்றிரவு 10.38 தொடக்கம் நாளை அதிகாலை 1.42 வரை சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பீடத்தின் பேராசிரியர், வானியல் நிபுணர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். இவ்வாறான நான்கு சந்திர கிரகணங்களும் பூரண கிரகணங்கள் இரண்டும் இந்த வருடம் தென்படவுள்ளதாக அவர் கூறினார். சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் விழும். மேலும், கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.