அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்

அமெரிக்க இராஜதந்திரியும் ரஷ்ய வௌிவிவகார அமைச்சரும் இலங்கை வரவுள்ளனர்

by Staff Writer 10-01-2020 | 4:09 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி அவர் நாட்டிற்கு வருகின்றார். இந்த விஜயத்தை தொடர்ந்து ஆலிஸ் வெல்ஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது, நாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் அமைப்பின் உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். மனித உரிமைகள், நீதி, ஜனநாயகம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில், இந்தோ-பசிபிக் வலயத்தின் அபிலாசைகள் உள்ளிட்ட பிராந்திய மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை, ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சர்ஜி லவ்ரவ் (Sergei Lavrov) எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அத்துடன், சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்தது.