by Staff Writer 10-01-2020 | 4:21 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜைகளை தடுத்து வைத்திருக்கும் மிரிஹான தடுப்பு முகாமின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு படையினரை அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில் கைதிகள் சிலர் முகாமில் இருந்து தப்பிச்சென்றதையடுத்து கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்வதற்காக பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 90-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.