பயணிகளின் தங்காபரணங்களை கொள்ளையடிக்கும் மூவர் பலாங்கொடையில் கைது

பயணிகளின் தங்காபரணங்களை கொள்ளையடிக்கும் மூவர் பலாங்கொடையில் கைது

பயணிகளின் தங்காபரணங்களை கொள்ளையடிக்கும் மூவர் பலாங்கொடையில் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2020 | 3:53 pm

Colombo (News 1st) பஸ்களில் பயணிகளின் தங்காபரணங்களை கொள்ளையடிக்கும் மூவர் பலாங்கொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் இருவர் பெண்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

பலாங்கொடை நகரில் பயணிகள் பஸ்ஸொன்றில் வைத்து பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட 4 தங்கச்சங்கிலிகள், 2 கைச்சங்கிலிகள், 6 மோதிரங்கள் உள்ளிட்ட தங்காபரணங்கள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேநபர்கள் பதுளை, வவுனியா, இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர்களுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்