தர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

தர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

தர்பாரில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2020 | 6:18 pm

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் நேற்று (09) வௌியானது.

இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை கேலி செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இது குறித்து லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டன. இருப்பினும், அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுகிறது என லைக்கா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்