கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர்வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2020 | 3:25 pm

Colombo (News 1st)  கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம், கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் பிரகாரம், பேலியகொட, வத்தளை மற்றும் மாபொல நகரசபைக்குட்பட்ட பகுதிகள், களனி பிரதேச சபைக்குட்பட்ட எலகந்த, ஹெந்தல, பள்ளியவத்த பகுதிகளிலும், பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி ஆற்றின் தெற்கு கரை அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட செயற்றிட்ட நடவடிக்கைகளால் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்