ஈரான் விவகாரம்: ட்ரம்பின் அதிகாரக் கட்டுப்பாட்டுத் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2020 | 4:38 pm

ஈரான் மீது போர் தொடுப்பது குறித்து தீர்மானமெடுப்பதில் ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் 194 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாகவுள்ள செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவிற்கு ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் ஈரானுடன் மோதலில் ஈடுபட அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை ட்ரம்ப் நிர்வாகம் பெற வேண்டும் என இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுமே தமது அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்