அருங்காட்சியக வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

D.A.ராஜபக்ஸ அருங்காட்சியக நிதி மோசடி வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 09-01-2020 | 3:59 PM
Colombo (News 1st) D.A.ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசிற்கு சொந்தமான 3 கோடியே 39 இலட்சம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மேல் மாகாண மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார். வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் அறிவிப்பதற்காக குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.