உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு பிமல் கோரிக்கை

நாட்டிற்கு பாதகமான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் பிமல் ரத்நாயக்க கோரிக்கை

by Bella Dalima 09-01-2020 | 8:16 PM
Colombo (News 1st) வலுப்பெற்று வருகின்ற மத்திய கிழக்கு போர் ஆபத்து தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தி நாட்டிற்கு பாதகமான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதிக்கு பிமல் ரத்நாயக்க கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் இறைமைக்கும் உண்மையிலேயே அச்சுறுத்தலாக அமைந்துள்ள 1995 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட SOFA உடன்படிக்கையையும் 2007 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் கால நீடிப்பு செய்யப்பட்ட ACSA உடன்படிக்கையையும் உடனடியாக இரத்து செய்யுமாறு பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த உடன்படிக்கைகளை இரத்து செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.