கொழும்பு – ஹைட் பார்க் கார்னரில் உள்ள கட்டடத்தில் தீ பரவல்

கொழும்பு – ஹைட் பார்க் கார்னரில் உள்ள கட்டடத்தில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2020 | 3:21 pm

Colombo (News 1st) கொழும்பு – யூனியன் பிளேஸ், ஹைட் பார்க் கார்னரில் உள்ள கட்டடத் தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளது.

கார் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலைய வளாகத்திலேயே தீ பரவியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்